உலகின்  மூத்த உறுப்பினர் மரணம்! சோகத்தில் மூழ்கிய ரஷ்யா!

உலகின்  மூத்த உறுப்பினர் மரணம்! சோகத்தில் மூழ்கிய ரஷ்யா!

1896ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி பிறந்தவர் ரஷ்யாவின், அஸ்ட்ரகான் பகுதியைச் சேர்ந்த தன்சில்யா பிசம்பெயேவா. முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என்று உலகின் பல இக்கட்டான சம்பவங்களின் நேரிடை சாட்சியாக இது நாள் வரையிலும் வாழ்ந்து வந்தவர். கைகளால் எண்களைச் சுழற்றும் தொலைபேசிகள் அறிமுகமானதைப் பார்க்காமலேயே பலர் இறந்திருந்தனர்.

old women

தொலைபேசியைப் பயன்படுத்திய பலருக்கு செல்போன்களைப் பார்க்கும் வாய்ப்புகள் இல்லாமல் போனது. செல்போனில் ஆச்சர்யமாக பேசி மகிழ்ந்த பலரும் ஆண்ட்ராய்டு செல்போன்களைப் பற்றி அறியாமலேயே வாட்ஸ்-அப் அரட்டைகளை அனுபவிக்காமல் இறந்து போனார்கள்.
இதுவரையிலான அனைத்து தொழில் நுட்பங்களையும், விஞ்ஞான வளர்ச்சிகளையும் அனுபவித்து, பார்த்து ரசித்த இந்த மூதாட்டி தனது 123 வது வயதில் உயிரிழந்தார். உலகிலேயே அதிக வயதான மூதாட்டியாக கருதப்பட்டவர் தன்சில்யா பிசம்பெயேவா. உலகிலேயே மிகவும் வயதான மூதாட்டியாக அறியப்பட்ட இவர், நேற்று உயிரிழந்தார்.அவரது உடல் குடும்பத்தினருக்கான கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.