உலகின் முதல் 44 எம்.பி டுயல் பன்ச் ஹோல் கேமரா – ஓப்போ ரெனோ 3 ப்ரோ விற்பனை இந்தியாவில் தொடக்கம்

 

உலகின் முதல் 44 எம்.பி டுயல் பன்ச் ஹோல் கேமரா – ஓப்போ ரெனோ 3 ப்ரோ விற்பனை இந்தியாவில் தொடக்கம்

ஓப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியது.

டெல்லி: ஓப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியது.

உலகின் முதல் 44 எம்.பி டுயல் பன்ச் ஹோல் கேமரா கொண்ட ஓப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்கியது. இதன் பேஸ் மாடல் விலை ரூ.29,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஷோரூம்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆற்றல் மிக்க வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சில சலுகைகளையும் ஓப்போ அறிவித்துள்ளது. அதன்படி ஓப்போகேர் மூலம் ஸ்மார்ட்போன் சேத பாதுகாப்பு வசதி, குறிப்பிட்ட சில வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் விலை சலுகை, 100 சதவீதம் ஜியோ டேட்டா ஆகிய விற்பனை சலுகைகளை ஓப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்காக வழங்குகிறது.

ttn

ஓப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களாக பளபளக்கும் கிளாஸ் வடிவமைப்பு, கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 6.4 இன்ச் அமோலேட் டிஸ்பிளே, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், 44 எம்.பி டுயல் பன்ச் ஹோல் கேமரா, 4025 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆரோரல் ப்ளூ, மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்கை வொயிட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.