உலகின் முதல் 3 கேமிராவுடன் கூடிய புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

உலகின் முதல் 3 கேமிராவுடன் கூடிய புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹுவாய் மேட் 20, ஹுவாய் மேட் 20 ப்ரோ மற்றும் ஹுவாய் மேட் 20 எக்ஸ் என்ற மூன்று புது மாடல் பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

லண்டன்: ஹுவாய் மேட் 20, ஹுவாய் மேட் 20 ப்ரோ மற்றும் ஹுவாய் மேட் 20 எக்ஸ் என்ற மூன்று புது மாடல் பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹுவாய் ஸ்மார்ட் போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதினால், மேட் சீரிஸ் போன்களுக்கும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹுவாய் மேட் சீரிஸ் ஸ்மார்ட் போன்கள், அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹுவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

6.3′ இன்ச் 3120×1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளே

ஹூவாய் கிரின் 980 பிராசஸர்

8 ஜிபி ரேம் / 256 ஜிபி சேமிப்பு, 6 ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிப்பு 

மெமரியை நீட்டிக்கும் வசதி 

ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் 

40 எம்பி பிரைமரி கேமரா, f/1.8 

20 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2

8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4

24 எம்பி செல்பி கேமரா, f/2.0

எல்.இ.டி பிளாஷ், கைரேகை சென்சார்

3டி ஃபேஸ் அன்லாக் 

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68) தரசான்றிதழ்

டூயல் ஸ்பீக்கர்கள், டூயல் 4ஜி வோல்ட்-இ, வைபை, ப்ளூடூத்

40 வாட் சூப்பர்சார்ஜ்

4200 எம்.ஏ.எச். பேட்டரி

நிறம்: மிட்நைட் புளு, பிளாக் மற்றும் டுவிலைட்

விலை – ரூ..89,050

ஹுவாய் மேட் 20 X ஸ்மார்ட்போனில், 7.2 இன்ச் 2244×1080 பிக்சல் FHD+ OLED 18.7:9 DCI-P3 HDR டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி  கொடுக்கப்பட்டுள்ளது. ஃபேன்டம் சில்வர் மற்றும் மிட்நைட் புளு நிறங்களில் கிடைக்கும் இந்த போனின் மதிப்பு ரூ.76,275 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஹுவாய் மேட் 20 ஸ்மார்ட்போனில், 6.5 இன்ச் 2244×1080 பிக்சல் FHD+ OLED 18:7:9 நாட்ச் டிஸ்ப்ளே, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் வசதி, 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு, 12 மெகா பிக்சல் பிரைமரி கேமரா  f/1.8,  16 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்  f/2.2, 8 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 24மெகா பிக்சல் செல்பி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மிட்நைட் புளு, பிளாக் மற்றும் டுவிலைட் நிறங்களில் கிடைக்கும் இந்த போனின் மதிப்பு ரூ.67,820 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.