உலகின் முதன்முறையாக ஏ.ஐ அசிஸ்டண்ட் வசதியுடன் ஸ்மார்ட் டிவி அறிமுகம்

 

உலகின் முதன்முறையாக ஏ.ஐ அசிஸ்டண்ட் வசதியுடன் ஸ்மார்ட் டிவி அறிமுகம்

ஐஃபால்கான் பிராண்டு 32 இன்ச் டிவி மாடலில் உலகிலேயே முதன்முறையாக ஏ.ஐ அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை: ஐஃபால்கான் பிராண்டு 32 இன்ச் டிவி மாடலில் உலகிலேயே முதன்முறையாக ஏ.ஐ அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே முதன்முறையாக ஏ.ஐ அசிஸ்டண்ட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவியை ஐஃபால்கான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அந்த டிவி 32 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும், ஐஃபால்கான் 32F2A டிவியில் மைக்ரோ டிம்மிங் மற்றும் வைட் எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லிட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திரையில் நிறங்கள் பிரகாசமாகவும், இயற்கை நிறங்களை மிகத்துல்லியமாக பிரதிபலிக்கும். ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் இன்-பில்ட் கூகுள் அசிஸ்டண்ட் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோ வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐஃபால்கான் 40F2A மற்றும் ஐஃபால்கான் 49F2A ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அக்டோபர் 2018-இல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுமட்டுமின்றி 32, 40 மற்றும் 49 இன்ச் தவிர, ஐஃபால்கான் நிறுவனம் 65 மற்றும் 75 இன்ச் டி.வி. மாடல்களை பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் சான்று பெற்றுள்ளது.

75 இன்ச் டிவி மாடலில் ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆடியோ அனுபம் சிறப்பாக இருக்கும் என ஐஃபால்கான் தெரிவித்துள்ளது. புதிய ஃபால்கன் 32F2A ஸ்மார்ட் டிவி விரைவில் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவிருக்கும் நிலையில் இதன் விலை குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.