உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் டெல்லி..இப்படியே சென்றால் என்ன ஆகுமோ? அச்சுறுத்தும் புள்ளி விபரம்!

உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் டெல்லி..இப்படியே சென்றால் என்ன ஆகுமோ? அச்சுறுத்தும் புள்ளி விபரம்!

சமீப காலமாக தலைநகரான டெல்லியில் காற்றின் தன்மை  மிகவும் மோசமாகி உள்ளது, மேலும் இந்த மாசுபட்ட காற்றினை சுவாசித்தல் பல உடல்  உபாதைகளைக் கொண்டு வரும். குறிப்பாக காசியபாத்தில் காற்றின் மாசு நிலை ரொம்ப ஆபத்தானதான நிலையில் உள்ளதாக  அறிவித்திருக்கிறார்கள். டெல்லியில் அதிகமான வாகனங்களும், தொழிற்சாலைகளும் உள்ளதால் இதிலிருந்து வெளிவரும் புகை காற்றினை மிகவும் மாசுபடுத்தி சுவாசிப்பதற்கே தருகியற்றதாக மாற்றியுள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது என்பதுதான் துயரம்!

pollution

டெல்லியில் நிலவும் பனிமூட்டம் காற்றில் கலந்து மக்களுக்கு சுவாசிப்பதற்கு மேலும் சிரமத்திற்குள்ளாக்குகிறது.வாரத்தின் துவக்கமே இப்படி காற்று மாசின் உச்சநிலையுடன் தொடங்க வேண்டியுள்ளது  டெல்லி வாசிகள் நிலமை . தவிர,இந்தியா கேட், தவுல்லா கான், மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 24-ல் பனிமூட்டம் அதிகளவில் காணப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு சாலை சரியாக தெரியாததால் ஸ்பீட் லிமிட் கொண்டுவர பட்டுள்ளது.

building

மேலும், உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை பகுதி நேரமாக டெல்லி என்சிஆர் பகுதியில் காலை 6 முதல் மாலை 6மணி வரை கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்துள்ளது. இரவில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க பட்டுள்ளது.எப்போதும் இல்லாத அளவுக்கு  காற்றின் மாசு அதிகரித்துள்ள நிலையில்,நவம்பர் மாதம் தேசிய தலைநகரில் சுகாதார அவசர நிலைஅறிவிக்கபட்டது. இதையடுத்து அப்புகுதியில் அனைத்து கட்டுமான பணிகளும் தடைசெய்யப்பட்டது.

delhi

காற்றின் மாசு நிலையின் அளவு:
0 முதல் 50 நல்ல காற்று
51 முதல் 100 பரவாயில்லை 
101 முதல் 200 சமநிலை 
201 முதல் 300 மோசம் 
301 முதல் 400 மிக மோசம்  
401 முதல் 500 பாதிப்பின் உச்சநிலை.
இப்போ டெல்லியின் மாசு எவ்வளவு தெரியுமா ? 419! பாவம் டெல்லி மக்கள்.