உலகின் மிகப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு! 700 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது !

 

உலகின் மிகப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு! 700 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது !

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பூமியின் மிகப் பழமையான திடப்பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐந்து முதல் ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த ஸ்டார்டஸ்ட் எனும் பொருள், ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த ஒரு விண்கல்லிலிருந்து வந்தது என்று தெரிவித்துள்ளனர்.

 

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பூமியின் மிகப் பழமையான திடப்பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐந்து முதல் ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த ஸ்டார்டஸ்ட் எனும் பொருள், ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த ஒரு விண்கல்லிலிருந்து வந்தது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் 1969-ல் விக்டோரியா மாநிலத்தின் முர்ச்சீசனில் விழுந்தது, சிகாகோவின் பீல்ட் அருங்காட்சியகத்தில் அதன் ஒரு பகுதியை ஐம்பது ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அருங்காட்சியகத்தில் விண்கற்களின் கண்காணிப்பாளரான பிலிப் ஹெக், சூரியன் உருவாவதற்கு முந்தைய தானியங்களை ஆய்வு செய்து வந்தார். இவை சூரியன் தோன்றுவதற்கு முன்னாடியே காணப்பட்ட கால எச்சங்கள் என குறிப்பிட்டுள்ளார். 

old-solid-material-01

இரண்டு பில்லியன் வருடங்கள் வாழ்ந்த பிறகு முதன் முதலில் தோன்றிய நட்சத்திரங்கள் இறந்து போயின. ​​அவை ஸ்டார்டஸ்ட் என்ற தனது எச்சங்களை விட்டுச் சென்றன. பிற்காலத்தில் இவை ஆஸ்திரேலியாவில் விழுந்தது போல் ஒரு விண்கல் தொகுதியாக உருவெடுத்தன.

1987 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் தானியங்களை அடையாளம் கண்டிருந்தாலும், அவற்றின் வயதை தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் ஹெக் மற்றும் சக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இந்த தானியங்களைத் தேடுவதற்கு ஒரு புதிய முறையைப் பயன்படுத்தினர். அதன் மூலம் இந்த ஸ்டார்டஸ்ட் ஒரு நட்சத்திரம் குளிர்ச்சியடையும் போது உருவாகும் முதல் தாது. அவை நுண்ணிய அளவிலானவை. மேலும், இவை சிலிக்கான் கார்பைடுகளிலிருந்து வந்தவை என கண்டறிந்தனர்.

stardust

இவற்றின் வயதை கண்டுபிடிக்க இவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்த சில தனிமங்களுடன் இந்த நட்சத்திரங்களின் பகுதியையும் அமிலங்களில் கரைத்தனர். அந்த செய்முறையில் சூரியனுக்கு முந்தைய துகள்கள் மட்டும் அமிலத்தில் கரையாமல் கிடைத்தன. “இது ஊசியைக் கண்டுபிடிக்க வைக்கோலை எரிப்பது போன்றது” என்று ஹெக் கூறுகிறார்.

பத்து வருடங்களுக்கு முன்னர், விண்கல்லில் இருந்து பெறப்பட்ட 20 தானியங்கள் மட்டுமே வேறு முறைகளால் வயது கணக்கிடப்பட்டன. இப்போது, ​​ஆராய்ச்சியாளர்கள் 40 தானியங்களின் வயதை தீர்மானிக்க முடிந்தது, அவற்றில் பெரும்பாலானவை 4.6 பில்லியனுக்கும் 4.9 பில்லியனுக்கும் இடைப்பட்டவை.

இந்த ஸ்டார்டஸ்ட் தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப் பழமையான திடப் பொருட்கள், மேலும், அவை நமது விண்மீன் மண்டலத்தில் நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின என்பதைப் பற்றியும் நமக்குச் சொல்கின்றன” என்று கூறியுள்ளனர்.

மற்ற விண்கற்களிலும் இதே முறையைப் பயன்படுத்தி அவற்றின் வயதை கணக்கிடுவதே இப்போதைய வேலை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.