உலகின் மிகப்பெரிய தேனீ இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு!!

 

உலகின் மிகப்பெரிய தேனீ இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு!!

உலகின் மிகப்பெரிய தேனீ இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ’வாலஸ் ராட்சத தேனீ’ என்று பெயரிட்டுள்ளனர்

ஜகர்த்தா: உலகின் மிகப்பெரிய தேனீ இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ’வாலஸ் ராட்சத தேனீ’ என்று பெயரிட்டுள்ளனர்.

இயற்கைச் சமநிலை சங்கிலிக்கு மிகவும் பங்களிப்பு செலுத்துகின்ற தேனீக்களின் இருப்பை பதிவு செய்வதற்காக உயிரியலாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

wallace gaint bee

அந்தவகையில், கடந்த 1859-ஆம் ஆண்டு வாலஸ் என்ற உயிரியலாளர் உலகின் மிகப்பெரிய தேனீயை கண்டுபிடித்தார். இதையடுத்து 122 ஆண்டுகளுக்கு பின்னர், 1981-ஆம் ஆண்டு ஆடம் மெஸ்ஸர் என்பவர் உலகின் மிகப்பெரிய தேனீயை கண்டுபிடித்தார்.

wallace gaint bee

அதற்கு பின்னர் கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்கு மேலாகியும் உலகின் மிகப்பெரிய தேனீ எது என்று கண்டறியப்படாமல் இருந்தது வந்தது. இந்நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய  நாடுகளைச் சேர்ந்த உயிரியலாளர்கள் அடங்கிய குழு சமீபத்தில், உலகின் மிகப்பெரிய தேனீயை இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான மோலூக்கஸ் பகுதியில் கண்டறிந்துள்ளனர். இதற்கு ’உயிரியலாளர் வாலஸ்’ நினைவாக ’வாலஸ் ராட்சத தேனீ’ என்று பெயரிட்டுள்ளனர்.

wallace gaint bee

இந்த தேனீ மெகசில் புளுட்டோ என்ற வகையைச் சேர்ந்த பெண் தேனீ ஆகும். இதனுடைய இறக்கைகள் 2.5 நீளமுடையதாகவும், இந்த தேனீ மனித கட்டை விரல் அளவிற்கும் இருப்பதாகவும் உயிரியலாளர்கள் கூறியுள்ளனர்.