உலகளவு ட்ரெண்டிங்கில் ‘2.0’: அதிர வைக்கும் ரஜினி மேஜிக்!

 

உலகளவு ட்ரெண்டிங்கில் ‘2.0’: அதிர வைக்கும் ரஜினி மேஜிக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.o’ படத்தின் டிரைலர் ரிலீசாகி சமூக வலைத்தளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.o’ படத்தின் டிரைலர் ரிலீசாகி சமூக வலைத்தளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘2.o’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. சத்யம் திரையரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே முதன் முறையாக 4டி சவுண்ட் சிஸ்டம் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிரைலர் வெளியீட்டு விழாவின் தொடக்கத்தில் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘புல்லினங்கால்’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘இந்திரலோகத்து சுந்தரியே’ பாடலும் திரையிடப்பட்டது.

யூடியூபில் வெளியிடப்பட்ட இந்த டிரைலர் ட்விட்டரில், உலகளவில் டாப் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது. மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்திய திரைப்படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.