உலகளவில் வசூலை வாரிக் குவிக்கும் ’அக்வாமேன்’!

 

உலகளவில் வசூலை வாரிக் குவிக்கும் ’அக்வாமேன்’!

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் மற்றும் டிசி காமிக்ஸ் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான ‘அக்வாமேன்’ வசூலை வாரிக் குவித்து வருகிறது.

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் மற்றும் டிசி காமிக்ஸ் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான ‘அக்வாமேன்’ வசூலை வாரிக் குவித்து வருகிறது.

கான்ஜிரிங் இயக்குநர் ஜேம்ஸ் வார்ன் இயக்கிய ‘அக்வாமேன்’ திரைப்படம், சீனா, பிரேசில், ரஷ்யா, இந்தோனேசியா, மெக்சிக்கோ, தைவான், லண்டன், பிலிப்பைன்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் வெளியானது. இந்தியாவில் மட்டும் ரூ.28 கோடி வசூலித்துள்ள இப்படம் மொத்தமாக, ஒரே வாரத்தில் 261 டாலர் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பிற்கு ரூ.1800 கோடியை நெருங்கிவிட்டதாக தெரிகிறது.

aquaman

ஹாலிவுட் திரையுலகில் மார்வல் மற்றும் டிசி காமிக்ஸ் இடையே போட்டா போட்டி இருப்பது வழக்கம். இதில் மார்வல் சூப்பர் ஹீரோஸ் சீரிஸ்களே ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்ற நிலையில், ‘பேட் மேன்’ சீரிஸை தொடர்ந்து ‘அக்வாமேன்’ என டிசி காமிக்ஸும் கடும் போட்டியை கொடுத்துள்ளது.

aquaman

சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பில் உருவான ’அக்வாமேன்’ திரைப்படம், கடல் ராஜ்ஜியத்தையை கைப்பற்ற சண்டையிடும் அண்ணன் – தம்பி கதையாகும். அமெரிக்காவில் இப்படம் வரும் டிச.21ம் தேதி ரிலீசாகவுள்ளதால் இப்படத்தின் வசூல் அசால்ட்டாக ரூ.3000 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.