உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப் சேவை மீண்டும் தொடங்கியது

 

உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப் சேவை மீண்டும் தொடங்கியது

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் தினசரி கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் யூடியூப் இணையதளம் இன்று காலை திடீரென முடங்கியது. இதையடுத்து, யூ டியூப் டிவி, யூ டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சரி செய்த பின்னர் தகவல் தெரிவிக்கப்படும். இடையூறுக்கு மன்னிப்பு கோருகிறோம் என யூ டியூப் விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப் இணையதளம், பிரச்னை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.