உலகம் முழுவதும் குறைவான வசூலை பெற்ற ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’!

 

உலகம் முழுவதும் குறைவான வசூலை பெற்ற ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’!

சமீபத்தில் வெளியான டிசி பிலிம்ஸ் திரைப்படமான ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ உலகம் முழுக்க குறைவான வசூலை பெற்றுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்: சமீபத்தில் வெளியான டிசி பிலிம்ஸ் திரைப்படமான ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ உலகம் முழுக்க குறைவான வசூலை பெற்றுள்ளது.

டிசி எக்ஸ்டன்டட் ஃபிலிம் யுனிவர்ஸ் திரைப்படத் தொடரில் ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ படம் சமீபத்தில் வெளியானது. பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் ராபி இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் திரைக்கு வெளியான முதல் வாரத்தில் குறைந்த வசூலை பெற்று, இந்த திரைப்படத் தொடரிலேயே மிகவும் குறைவான முதல் வார கலெக்ஷனை பெற்ற படமாக ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ மாறியுள்ளது. சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமான வசூலை இந்தப் படம் முதல் வாரத்தில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.578 கோடி வசூலை மட்டுமே இந்தப் படம் முதல் வாரத்தில் வசூலித்துள்ளது.

ttn

அந்த வகையில், இந்த திரைப்பட தொடரில் குறைவான முதல் வார கலெக்ஷனை பெற்றதாக கருதப்படும் ‘ஷசாம்’ படத்தின் வசூலை விட (ரூ.1132 கோடி) ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ மிகக் குறைவான வசூலை பெற்றுள்ளது. இது டிசி ரசிகர்கள் இடையே பெருத்த ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது. இன்னொரு புறம் டிசி நிறுவனத்தின் போட்டி நிறுவனமாக கருதப்படும் மார்வல் நிறுவனம் தயாரிக்கும் படங்கள் வசூலில் சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டை போல சமூக வலைதளங்களில் மார்வல் – டிசி ரசிகர்கள் இடையேயும் சண்டை ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.