உலகம் முழுவதும் அடுத்த 48 நேரத்துக்கு இணையதளம் முடக்கம்?

 

உலகம் முழுவதும் அடுத்த 48 நேரத்துக்கு இணையதளம் முடக்கம்?

உலகம் முழுவதும் அடுத்த 48 நேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மாஸ்கோ: உலகம் முழுவதும் அடுத்த 48 நேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பல நாடுகளில் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டுவரை இணையதள குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 350 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், ஆரம்பத்தில் அமெரிக்கா, ஐரோப்பியா, சீனா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்பட்ட இணையதள ஊடுருவல் தற்போது உலகம் முழுவதும் பெருகியுள்ளதாக கூறப்படுகிறது.

இணைய தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு தொடர்பாக போதுமான கட்டமைப்புகள் இல்லாததால் இந்தியாவில் இணையதள குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களில் வருகையாலும் வளர்ந்துவரும் இணைய சேவையாலும் இத்ததைய குற்றங்கள் அதிகரிக்கின்றன. தனிப்பட்ட நபரின் கணினியில் மட்டும் ஊடுருவுவது இல்லாமல் வணிகம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத்திலும் ஊடுருவி அவற்றை பாதிக்க செய்கின்றனர் இணைய குற்றவாளிகள்.

இந்நிலையில், உலகின் முக்கிய டொமைன் சர்வர்கள் பராமரிக்கப்படுவதால் அடுத்த 48 நேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையதள தகவல் பாதுகாப்பை அதிகரிக்கவும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் இணையதள திருட்டுகளைத் தடுக்கவும் இந்த பராமரிப்பு பணிகளை, ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய கழகமான ICANN மேற்கொள்ளவுள்ளது. இந்த பராமரிப்பு பணியின் போது ‘கிரிப்டோகிராபிக் கீ’ எனப்படும் குறியாக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதால் இணையதள சேவை முடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.