உலகம் முழுக்க ஹிட்டடித்த ‘அலாடின்’ பார்ட் -2 ரெடி…! எப்போ ரிலீஸ்..?!

 

உலகம் முழுக்க ஹிட்டடித்த ‘அலாடின்’ பார்ட் -2 ரெடி…! எப்போ ரிலீஸ்..?!

மீண்டும் 2019-ல் ‘அலாடின்’ என்கிற பெயரில் மேனா மசூத்,நவோமி ஸ்காட் நடிப்பில் மறுபடியும் படமாக்கியது டிஸ்னி,ஹாலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான வில் ஸ்மித்,குறும்பும்,செண்ட்டிமெண்ட்டும்,காதலும் நிறைந்த பூதமாக வந்து குழந்தைகளைக் கவர்ந்தார்.படத்தை விமர்சகர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை, ஆனால் அந்த படம் இந்திய மதிப்பில் 71 ஆயிரம் கோடி வசூலித்தது.

அலாவுதீனும் அற்புதவிளக்கும் என்கிற சாகவரம் பெற்றகதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று.1001 ஒரு அரபிக்கதைகளில் சிந்துபாத்தும்,அலாவுதீனும் உலகின் அத்தனை மொழியிலும் படமாகி இருக்கின்றன. 1957-ல் டி.ஆர் ரகுநாத் இயக்கத்தில் தமிழில் படமாக்கி இருக்கிறார்கள். மீண்டும் 1979-ல் கமல் ரஜினி நடிக்க மீண்டும் படமாக்கப்பட்டது இயக்குநர் ஐ.வி சசியால்.

alauthi1

இவையாவுமே மூலக்கதையை அடியொற்றி எடுக்கப்பட்டவையே.1992-ல் அலாவுதீனை பதின் பருவ பையனாக்கி டிஸ்னி ஸ்டுடியோ எடுத்த படம் உலக சினிமா ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

aladdin2.jpg.2

மீண்டும் 2019-ல் ‘அலாடின்’ என்கிற பெயரில் மேனா மசூத்,நவோமி ஸ்காட் நடிப்பில் மறுபடியும் படமாக்கியது டிஸ்னி,ஹாலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான வில் ஸ்மித்,குறும்பும்,செண்ட்டிமெண்ட்டும்,காதலும் நிறைந்த பூதமாக வந்து குழந்தைகளைக் கவர்ந்தார்.படத்தை விமர்சகர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை, ஆனால் அந்த படம் இந்திய மதிப்பில் 71 ஆயிரம் கோடி வசூலித்தது.

aladdin2.jpg.1

விடுமா வால்ட் டிஸ்னி,இதோ இரண்டாம் பாகம் எடுக்க தயாராகிவிட்டார்கள். ஜான் கார்டின்ஸ்,ஆண்ட்ரியா பெர்லி திரைக்கதையை எழுதுகிறார்கள்.அதே கை ரிச்சி இயக்குகிறார். மேனா மசூத் அலாவுதீனாகவும் நவோமி ஸ்காட் இளவரசி ஜாஸ்மினாகவும் நடிக்கிறார்கள். மீண்டும் அந்த நீலக்கலர் பூதமாக வில்.ஸ்மித் நடிக்கிறார்.