உலகம் முழுக்க சுமார் 11 கோடி ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விற்ற சியோமி நிறுவனம்

 

உலகம் முழுக்க சுமார் 11 கோடி ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விற்ற சியோமி நிறுவனம்

சியோமி நிறுவனம் இதுவரை உலகில் சுமார் 11 கோடி ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது.

டெல்லி: சியோமி நிறுவனம் இதுவரை உலகில் சுமார் 11 கோடி ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது.

சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் 2014 முதல் சந்தையில் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மலிவான விலையில் சிறந்த சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களாக இருப்பதே இதற்கு காரணம். முதல் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் முதல் சமீபத்திய ரெட்மி நோட் 9-சீரிஸ் வரை சியோமி என்பது இந்தியாவில் ஒரு பிரபலமான பிராண்டாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், ரெட்மி பிராண்டை சியோமி நிறுவனம்  அறிமுகம் செய்ததில் இருந்து 2019-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு வரை உலகளவில் சுமார் 11 கோடி ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இதனை சியோமி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சமீபத்தில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மாடல்களை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது.