உலகமே இந்தியா பக்கம், நமக்கு ஒரு பய சப்போர்ட் பண்ண மாட்டான்- பாகிஸ்தான் அமைச்சர் புலம்பல்

 

உலகமே இந்தியா பக்கம், நமக்கு ஒரு பய சப்போர்ட் பண்ண மாட்டான்- பாகிஸ்தான் அமைச்சர் புலம்பல்

காஷ்மீர் விவகாரத்தில் உலகமே இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. தங்களுக்கு ஒரு நாடும் சப்போர்ட் செய்யாது என்பதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறப்பு அந்தஸ்து நீக்கம், யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு என காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் அரண்டு போய் உள்ளது. இந்தியாவின் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட மசோதா 2019ஐ எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். குரேஷி கடிதம் எழுதினார். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அதனை கண்டு கொள்ளவில்லை. இது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்தது.

ஐக்கிய நாடுகள்

மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா உள்பட பல நாடுகள் தெரிவித்தன. அதேசமயம் இஸ்லாமிய நாடுகள் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது அந்நாட்டுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதன் எதிரொலியாகத்தான் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். குரேஷி புலம்பியுள்ளார்.

இந்தியாவின் புதிய யூனியன் பிரதேசங்கள்

பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு செய்தி கருத்தரங்கில் அந்நாட்டு வெளியுறவுத்துறை எஸ்.எம். குரேஷி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: காஷ்மீர் விவகாரத்தில் நமக்கு ஆதரவாக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் யாரும் கையில் மாலையோடு  நிற்கவில்லை.  கவுன்சிலில் உள்ள 5 உறுப்பினர்களும் கூட நமக்கு தடை போட முடியும். முஸ்லிம் நாடுகள் கூட நமக்கு சப்போர்ட் செய்யாது. அதனால் இதில் உங்களுக்கு எந்தவித தெளிவற்ற நிலையும் இருக்க கூடாது. மேலும் முட்டாளின் சொர்க்கத்தில் வாழாதீர்கள்.

ஏராளமான நாடுகளுக்கு அங்கு(இந்தியா) ஆர்வம் உள்ளது. இதனை ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன். நீங்கள் அதனை பெறுவீர்கள் என நம்புகிறேன். அது ஒரு மறுசீரமைப்பு. அது 100 கோடி மக்களின் சந்தை, அங்கு ஏராளமான மக்கள் முதலீடு செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.