உலகநாடுகளை அச்சுறுத்த ஈரான் அரசு முடிவு – போருக்கு தயாராகிறதா?

உலகநாடுகளை அச்சுறுத்த ஈரான் அரசு முடிவு – போருக்கு தயாராகிறதா?

செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை 10 மடங்காக அதிகரித்து அணு ஆயுதங்கள் தயாரிக்கப் போவதாக உலக நாடுகளுக்கு ஈரான் அரசு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஈரான் நாட்டு அரசு ஏற்படுத்தியது. இதனால் அந்த நாடுகளுக்கிடையே நட்பு அதிகரித்தது.

trump

அதேபோல் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா விடுத்திருந்த பொருளாதாரத் தடையை நீக்கவும் வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அதிபர் டிரம்ப் இந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அதிரடி முடிவை வெளியிட்டார். அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டு இந்த விலகும் முடிவு எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடையையும் விதித்தார். இதனால் ஈரான் அரசு பெரும் பொருளாதார சரிவை சந்திக்க நேரிட்டது. 

இதனால் அதிருப்தி அடைந்த ஈரான் அரசு, இந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் மீதமிருக்கும் நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொருளாதார தடையை நீக்க உதவவேண்டும் என ஈரான் அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த உதவியை செய்ய தவறினால், ஈரான் அரசு செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் எனவும், இந்த பேச்சுவார்த்தை நடத்த மற்ற நாடுகளுக்கு 60 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உண்டு எனவும் ஈரான் அரசு குறிப்பிட்டிருந்தது.

iran and america

நேற்றுடன் 60 நாட்கள் முடிவுற்ற நிலையில் இன்று முதல் அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை ஈரான் அரசு 10 மடங்காக உயர்த்தியிருக்கிறது. ஈரான் அரசின் இந்த அதிரடி முடிவால் உலக நாடுகள் பாதிக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று வல்லுநர்கள் பலர் கணித்து வருகின்றனர். ஆரம்பத்திலேயே யுரேனியம் உற்பத்தியை தடுக்கவில்லை என்றால் உலக நாடுகள் அழிவை நோக்கி செல்லக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

-vicky