உலகக் கோப்பை: பேட்டிங், பவுலிங்கில ஸ்ட்ராங்! ஆனா அரையிறுதி வரை மட்டும்தான் போக முடியும்- தென்னாப்பிரிக்காவின் பரிதாப நிலைமை!!

 

உலகக் கோப்பை: பேட்டிங், பவுலிங்கில ஸ்ட்ராங்! ஆனா அரையிறுதி வரை மட்டும்தான் போக முடியும்- தென்னாப்பிரிக்காவின் பரிதாப நிலைமை!!

உலகக்கோப்பையில் 4 முறை அரையிறுதிக்கு முன்னேறி உள்ள தென்னாப்பிரிக்கா, 19‌92,1‌999 ஆம் ஆண்டுகளில் துரதிர்ஷ்டத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. 

உலகக்கோப்பையில் 4 முறை அரையிறுதிக்கு முன்னேறி உள்ள தென்னாப்பிரிக்கா, 19‌92,1‌999 ஆம் ஆண்டுகளில் துரதிர்ஷ்டத்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. 

தென்னாப்பிரிக்கா அணி 1992 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக்கோப்பை அரங்கில் அடியெடுத்து வைத்தது. அதில், அனைவரும் வியக்கும் வகையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது அந்த அணி. ஆனால், அன்று முதல் கடந்த உலகக்கோப்பை வரை, அந்த அணியின் உச்சபட்ச செயல்பாடுகளே அரையிறுதிகளுக்கு முன்னேறியது தான். 

2015 ஆம் ஆண்டு அரையிறுதியிலோ நியூசிலாந்து வீரர் எலியட் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை தென்னாப்பிரிக்க வீரர்கள் நழுவவிட்டனர். இல்லை உலகக்கோப்பையையே நழுவவிட்டனர் என்று தான் கூறவேண்டும்.

tt

நடப்பு உலகக்கோப்பையை கைப்பற்றும் என கணிக்கப்படும் அணிகளில் ஒன்றாகவே தென்னாப்பிரிக்க அணி பார்க்கப்படுகிறது. குறிப்பாக அண்மையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக தனதாக்கியது தென்னாப்பிரிக்கா. பேட்டிங்கை பொறுத்தமட்டில் குயிண்டன் டிகாக், ஃபாப் டூ பிளஸ்ஸி, ரஸ்ஸி வான் டர் டூஸன் ஆகியோர் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இறுதி ஓவர்களில் அதிரடி காட்ட மில்லர், ஜெ பி டுமினி ஆகியோர் அணியில் உள்ளனர். அதே போல் பந்துவீச்சில் அசுர பலத்துடன் உள்ள அணியில் ஒன்று தென்னாப்பிரிக்கா எனலாம். 

uu

ஐபிஎல் தொடரில் கலக்கியவர்களான இம்ரான் தாஹிர், ககிஸோ ரபாடா மற்றும் அனுபவ வீரர் ஸ்டெயின் ஆகியோர் அந்த அணிக்கு பந்துவீச்சில் ஆணிவேர்களாக உள்ளனர். அதே சமயம் இளம்‌ வீரர்கள் லுங்கி நிகிடி, ப்ரிடோரியஸ் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருவது கூடுதல் பலமாகும்.

அனுபவ வீரர் ஹசிம் ஆம்லா அண்மைக்காலமாக அரைசதம் அடிக்கவே திணறி வருவது அந்த அணிக்கு பலவீனம் என்றே கூறலாம். மேலும் கடந்த உலகக்கோப்பைகளில் அரையிறுதிப்