உலகக் கோப்பை: நேசமணியாக மாறிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!!

உலகக் கோப்பை: நேசமணியாக மாறிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!!

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா காயமடைந்து வெளியேறினார். இதனால் உலகக்கோப்பையில் நேசமணியாக மாறிய ஆம்லா என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர். 

உலகக்கோப்பையின் முதல் லீக் போட்டி, லண்டனில் உள்ள கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பந்துவீச்சை தேர்வு செய்ய தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியில் களமிறங்கிய ஸ்டோக்ஸ்(89), மோர்கன்(57), ஜேசன் ராய்(54) மற்றும் ஜோ ரூட்(51) ஆகியோரின் அதிரடியால் 311 ஓட்டங்கள் குவித்தது. 

ii

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரர் ஹசிம் ஆம்லா இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் வீசிய பந்தில் காயமடைந்தார். இன்னிங்சின் 4வது ஓவரில், 144.8 கிலோ மீற்றர் வேகத்தில் ஆர்ச்சர் பந்துவீசியதால், அது ஆம்லாவின் தலையில் கடுமையாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்துபோன ஆம்லா துடுப்பாட்டம் செய்ய முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். நேசமணி தலையில் டங் டங் என சுத்தியல் விழுந்ததை போல் ஆம்லா தலையில் டமால் என பந்து விழுந்தது என நெட்டிசன்கள் காமெடி செய்து வருகின்றனர். முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 39.5 ஓவரில் 207 ஓட்டங்களுக்கு சுருண்டு இங்கிலாந்து அணியிடம் தோற்றுப்போனது.