உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்திய அணியுடன் களமிறங்கும் நம்ம ஜி.வி.பிரகாஷ்…

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று இந்திய அணியுடன் களமிறங்கும் நம்ம ஜி.வி.பிரகாஷ்…

’இத்தனை வேலைகளை எப்படி பாஸ் செய்யுறீங்க?’ என்று ஆச்சரியமாய் கேள்வி கேட்கவேண்டிய நிலையில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்

’இத்தனை வேலைகளை எப்படி பாஸ் செய்யுறீங்க?’ என்று ஆச்சரியமாய் கேள்வி கேட்கவேண்டிய நிலையில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், உலகக் கோப்பையின் முதல் மேட்சில் இன்று களமிறங்கும் இந்திய அணியை உற்சாகப்படுத்த ஒரு ஆன்தம் பாடலையும் உருவாக்கியிருக்கிறார். இன்று மதியம் 3 மணிக்கு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளவிருக்கும் சமயத்தில் இப்பாடல் இணையங்களில் வெளியாக இருக்கிறது.

gvp

 இசையமைப்பாளராக, நடிகராக மட்டும் திருப்தி அடையாமல் தொடர்ந்து சமூக சேவைகளிலும் தன்னை இடைவிடாது ஈடுபடுத்திக்கொண்டு  வரும்  ஜி.வி.பிரகாஷ் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக கோப்பையைக் கொண்டுவந்தே ஆகணும் என்ற கோஷத்துடன் அந்த ஆன்தம் பாடலை உருவாக்கியிருக்கிறார். 

gv

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. மேலும் சுமார் அரைடஜன் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை தவிர சூர்யா நடிப்பில் ’சூரரைப்போற்று’, தனுஷ் நடிப்பில் ’அசுரன்’உட்பட ஏழெட்டுபடங்களுக்கு படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.

 

இந்த பணிகளுக்கு இடையே ’மகத்தான மனிதர்கள்’ என்ற பெயரில் அதிகம் வெளியில் தெரியாத சமூக சேவகர்களை யூடியூபில் அடையாளப்படுத்த இருக்கிறார்.சினிமா மற்றும் சமூக பணிகளுக்கு இடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டுள்ள இந்திய அணியின் வெற்றிக்காக தமிழ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலுடன் இணைந்து இந்த  ஆன்தம் பாடலை உருவாக்கி இருக்கிறார்.இந்த பாடல் இன்று இந்தியாவின் முதல் போட்டியின்போது வெளியாக இருக்கிறது. கிரிக்கெட் போட்டியின் நேரலையின்போது இதன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பாடலின் சில வரிகள் கொண்ட புரோமோ (முன்னோட்டம்) ரிலீசாகி சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜி.வி