உலகக் கோப்பைக்கான வர்ணனையாளர்கள் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டது!

 

உலகக் கோப்பைக்கான வர்ணனையாளர்கள் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டது!

ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியின்  சில வீரர்கள் வர்ணனையை செய்யும் போது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். வீரர்களின் பேட்டிங் செய்யும் வித்தையும், அடிக்கும் ஷாட்களையும்,

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனை செய்யும் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அதன்படி, 12-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற மே 30-ம்தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. இதில் இந்திய அணியில்,ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோலி,விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

பொதுவாக எந்த கிரிக்கெட் தொடராக இருந்தாலும் வர்ணனையாளர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியின்  சில வீரர்கள் வர்ணனையை செய்யும் போது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். வீரர்களின் பேட்டிங் செய்யும் வித்தையும், அடிக்கும் ஷாட்களையும், இவ்வாறு ஷாட்டை ஆடியிருக்கக்கூடாது, பந்து எவ்வாறு வீசி இருக்க வேண்டும் என்பதையும் சுவாரஸ்யமாகக் கூறுவார்கள்.

icc

அதுமட்டுமல்லாமல், சில வர்ணனையாளர்கள் சர்ச்சையாகவும் பேசுவதுண்டு, சிலர் நகைச்சுவையாகப் பேசி பார்க்கும் ரசிகர்களையும் கலகலப்பாக வைத்திருப்பார்கள். அந்தவகையில் உலககோப்பைத் தொடருக்கான வர்ணனையாளர்கள் 24 பேரை தேர்வு செய்து அவர்களின் பெயர்களை வெளியிட்டது ஐசிசி. 

இந்தியா சார்பில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் ஹர்ஷா போக்ளே ஆகியோர் வர்ணனை செய்ய இருக்கின்றனர்.

வர்ணனையாளர்கள் பட்டியல்: 
1. நாசர் ஹூசைன
2. மைக்கேல் கிளார்க்
3. இயான் பிஷப்
4. சவுரவ் கங்குலி
5. மிலானே ஜோன்ஸ்
6. குமார் சங்கக்கரா
7. மைக்கேல் ஆர்தர்டன்
8. அலிசன் மிட்ஷெல்
9. பிரன்டன் மெக்கலம்
10. கிரேம் ஸ்மித்
11 வாசிம் அக்ரம்
12. ஷான் போலக்
13. மைக்கேல் ஸ்லாட்டர்
14. மார்க் நிகோலஸ்
15. மைக்கேல் ஹோல்டிங்
16. இஷா குஹா
17. போமி பாங்வா
18. சஞ்சய் மஞ்ரேக்கர்
19. ஹர்ஷா போக்லே
20. சைமன் டோல்
21. இயான் ஸ்மித்
22. ரமிஸ் ராஜா
23. அதர் அலி கான்
24. இயான் வாட்