உலகக்கோப்பை: முதல் போட்டியிலேயே மண்ணை கவ்விய தென்னாப்பிரிக்கா!

 

உலகக்கோப்பை: முதல் போட்டியிலேயே மண்ணை கவ்விய தென்னாப்பிரிக்கா!

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. 

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. 

ஐசிசி உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இங்கிலாந்து அணி 312 ரன்களை தென்னாப்பிரிக்காவிற்கு இலக்காக நிர்ணயித்தது.

தொடக்க வீரர்களாக டி காக், ஆம்லா களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே ரன் எடுக்க முடியாமல் தவித்துவந்தது. இதையடுத்து களமிறங்கிய மார்க்ரம் 13 ரன்களையும், கேப்டன் டூ பிளிசிஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதேபோன்று டி காக் 68 ரன்களுடனும், துசென் 50 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். பெலுக்வயோ மல்லுக்கட்டி விளையாடி 24 ரன்கள் எடுத்தார். இறுதியாக 39.5 ஓவரில்  207 எடுத்து ரன் டாட்பால்களுடன் தென்னாப்பிரிக்கா வெளியேறியது. 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது.