உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவை வெல்லுமா இந்தியா? 

 

உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவை வெல்லுமா இந்தியா? 

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், டாஸில் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவை வெல்லுமா இந்தியா? 

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்,  டாஸில் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. . மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தை பும்ரா வீச ஆம்லா ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  இதன் மூலம் இந்தியா தனது விக்கெட் வேட்டையை துவக்கியது. இன்றைய போட்டியின்  ஆறாவது ஓவரில் தென்னாப்பிரிக்காவின் மற்றொரு தொடக்க வீரரான டீ காக் விக்கெட்டையும் பும்ரா கைப்பற்றினார். 143 கி.மீ வேகத்தில் வந்த பந்தை கோலியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் டீ காக்.

தொடக்க வீரரான டீ காக் விக்கெட்டையும் பும்ரா கைப்பற்றினார்

அவர் 17 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். எட்டு ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 31 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது. தற்போது விளையாடி வரும் டு பிளசிஸ்,  இந்தியாவுக்கு எதிராக இதுவரை 13 இன்னிங்ஸ்களில் 658 ரன்களை எடுத்திருக்கிறார். இரண்டு சதமும் விளாசியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுடன் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கியிருக்கிறது.

ஆம்லா ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  

போட்டி நடந்துக் கொண்டிருக்கும் ஹாம்ப்ஷெர்  நகரில் முதல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே இடையே நடந்தது. இதுவரை இந்த மைதானத்தில் நடந்த 23 போட்டிகளில், 12 முறை முதலில் பேட்டிங் செய்தவர்களே வென்றிருக்கிறார்கள், ஒரு முறை போட்டி வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்திருக்கிறது.
2015ம் ஆண்டை தவிர உலகக் கோப்பையின் எந்த தொடரிலும் முதல் சில போட்டிகளில் இந்தியா சரியாக விளையாடியதில்லை. இந்தியா கோப்பையை வென்ற 2011 மேட்ச் ஆகட்டும், இறுதி வரை சென்ற 2003 மேட்ச் ஆகட்டும், இந்தியா உலக கோப்பையில் எப்போதும் சொதப்பலில்தான் தொடங்கி இருக்கிறது.