உலகக்கோப்பை எங்களுக்கு தான்; சவால் விடும் டேரன் சமி !!

 

உலகக்கோப்பை எங்களுக்கு தான்; சவால் விடும் டேரன் சமி !!

எதிர்வரும் உலகக்கோப்பையை விண்டீஸ் தான் வெல்லும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி ஆரூடம் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் உலகக்கோப்பையை விண்டீஸ் தான் வெல்லும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி ஆரூடம் தெரிவித்துள்ளார். 
கிரிக்கெட் உலகின் வல்லரசை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது. 

west indies

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் இந்த தொடருக்காக ஒட்டுமொத்த அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர், அடுத்த ஓரிரு தினங்களில் இந்தியா உள்பட அனைத்து அணிகளும் இங்கிலாந்திற்கு புறப்பட உள்ளனர். 
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள விண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி உலகக்கோப்பையை விண்டீஸ் கிரிக்கெட் அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

darren sammy

இது குறித்து பேசிய டேரன் சமி, கிரிஸ் கெய்ல் இந்த உலகக்கோப்பையோடு ஓய்வு பெற உள்ளதால், வெற்றியுடன் விடை பெற நினைப்பார். இதனால் மற்ற தொடர்களை விட இந்த தொடரில் கிரிஸ் கெய்ல் மிக சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன். இது தவிர பந்துவீச்சு பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் விண்டீஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த உலகக்கோப்பையை விண்டீஸ் அணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறேன்” என்றார்.