உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்கள் நிர்ணயம்!

 

உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்கள் நிர்ணயம்!

இறுதியில், இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 225 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம்  சவுத்தாம்டனில் இன்று நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும்  ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.  இதையடுத்து விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். கோலி 67 ரன்னிலும், கேதார் ஜாதவ் 52 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 225 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.