உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் இல்லாததை பின்னர் உணர்வீர்கள் – இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கருத்து!!

 

உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் இல்லாததை பின்னர்  உணர்வீர்கள் – இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கருத்து!!

முதல் முறையாக ரவுண்ட் ராபின் முறையில் இந்த ஆண்டு போட்டி நடைபெற்று, அதில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். 

உலகக் கோப்பை இந்திய அணியில் ரிஷப் பண்ட் இல்லாததை தொடரின் நடுவில் அனைவரும் உணர்வர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

risabhpant

பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் ஓரிரு வாரங்களிலேயே உலக கோப்பையும் துவங்க இருக்கிறது. மே 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெறும் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடரின் 12வது பதிப்பில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 

முதல் முறையாக ரவுண்ட் ராபின் முறையில் இந்த ஆண்டு போட்டி நடைபெற்று, அதில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். 

rishabh pant

 

உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் பங்குபெறும் பதினைந்து வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் வெளியிட்டார். இதில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் அம்பத்தி ராயுடு இருவரும் இடம் பெறாமல்; அவர்களுக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் இருவரும் சேர்க்கப்பட்டனர்.

தினேஷ் கார்த்திக் அனுபவம் அடிப்படையிலும் விஜய் சங்கர் பேட்டிங் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று கோணங்களிலும் சிறப்பாக செயல்படுவார் என்கிற விதத்திலும் எடுக்கப்பட்டதாக தேர்வுக் குழுவின் தலைவர் எம் எஸ் கே பிரசாத் விளக்கம் அளித்தார். 

சில வரவேற்புகள் கிடைத்தாலும் பல பக்கங்களிலிருந்தும் விமர்சனங்களே சந்திக்க நேர்ந்தது. 

ganguly

தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ஆலோசகருமான சௌரவ் கங்குலி இது குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

” உலக கோப்பையில் யாருக்கு பதிலாக இவர் இருந்திருக்க வேண்டும் நான் கருத்து தெரிவிக்க வில்லை. ஆனால், இவர் இல்லாததை உலகக்கோப்பை தொடரின் நடுவிலே உணரக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஏனெனில், எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றக்கூடியவர் ரிஷப் பண்ட்”.

” தேர்வுக் குழுவிற்கு பல கோணங்களில் வீரர்களை ஆராய வேண்டிய அவசியமும் இருக்கிறது” எனவும் கங்குலி சுட்டிக்காட்டினார்.

முதன்முதலாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் களமிறங்கிய ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராகவும் ஆஸ்திரேலிய தொடரிலும் சதம் அடித்து தனது இடத்தை நிலைநிறுத்திக்கொண்டார். அதேபோல, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் 16 போட்டிகளில் 488 ரன்கள் எடுத்து சராசரியாக 37.33 ரன்களை கொண்டுள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 165 க்கும் மேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி குவாலிபைர் 2 சுற்றுக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தவரும் ரிஷப் பண்ட் தான்.