உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முக்கிய வீரர்; ரசிகர்கள் கவலை !!

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட முக்கிய வீரர்; ரசிகர்கள் கவலை !!

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால், இந்த தொடரில் இங்கிலாந்து அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதி வரும் நிலையில் தற்பொழுது அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. 

xxvv

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அலெக்ஸ் ஹேல்ஸ், 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2419 ரன் எடுத்துள்ள இவரின் அதிகப்பட்சம் 171 ரன். 60 டி20 போட்டிகளில் விளையாடி 1644 ரன் சேர்த்துள்ளார். இதில் இவரது அதிகப்பட்சம் 116 ரன்களாகும்.

அடுத்த மாத இறுதியில் துவங்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த அலெக்ஸ் ஹேல்ஸ், சமீபத்தில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். அலெக்ஸ் ஹேல்ஸ் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவர் அடுத்த 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

xbcbcb

இதனால் உலகக்கோப்பையில் அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வியை இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்த நிலையில், உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 