உறுப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு! காஷ்மீர் விவாதம் தொடர்பான கோரிக்கையை திரும்ப பெற்ற சீனா…..

 

உறுப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு! காஷ்மீர் விவாதம் தொடர்பான கோரிக்கையை திரும்ப பெற்ற சீனா…..

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சலில் இதர உறுப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காஷ்மீர் மீது விவாதம் நடத்துவது தொடர்பான தனது கோரிக்கையை சீனா திரும்ப பெற்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அதுவரை சிறப்பு அந்தஸ்து கொடுத்து வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370யை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக அங்கு முன்னாள் முதல்வர்கள், பிரிவினைவாதிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை அதிரடியாக கைது செய்து காவலில் வைத்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு, செல்போன் மற்றும் இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள மேற்கொண்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியது பாகிஸ்தான் எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாவுடான வர்த்தக உறவை அந்நாடு துண்டித்தது. இதுதவிர, ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. சீனா மற்றும் ஒரு சில நாடுகளை தவிர வேறு எந்தநாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

சீனா

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதியன்று ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப சீனா முயன்றது. ஆனால், அது குறித்து பொது விவாதம் நடத்த மற்றும் ஒரு பொது அறிக்கை  விடுவதற்கு கூட  நமது நட்பு நாடுகள் மறுப்பு தெரிவித்தன. இதனால் சீனாவின் மூக்கு அறுப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப சீனா தீவிரமாக முயன்றது. ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது கோரிக்கையை சீனா திரும்ப பெற்றது. இது குறித்து பிரான்ஸ் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், இன்று (நேற்று) பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் குறித்து விவாதம் நடத்தவில்லை. காஷ்மீர் விவகாரம் இரு தரப்பு பிரச்னை என நியுயார்க் உள்பட பல இடங்களில் பலமுறை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம் என தெரிவித்தது. ஆக, இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் ஒரு முறை மண்ணை கவ்வியது சீனா.