உறுதியான தி.மு.க – வி.சி.க கூட்டணி: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திருமா?!

 

உறுதியான தி.மு.க – வி.சி.க கூட்டணி: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திருமா?!

 தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை: தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க – தி.மு.க கட்சிகளின் தலைமையின் கீழ் கூட்டணிகள் அமைத்துள்ளன. அந்த வகையில், திமுக கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு  ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து வி.சி.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது

இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன், மு.க.ஸ்டாலின் நடத்திய 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ‘தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான உடன்படிக்கையில், நானும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டுள்ளோம். எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்பது  பின்னர் அறிவிக்கப்படும். அதே நேரத்தில் எந்த சின்னத்தில் போட்டியிட்டால், கூட்டணிக்குச் சிறப்பாக அமையுமோ, அதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்போம்’ என்றார்.

முன்னதாக சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்றும் திருமாவளவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.