உறுதியானது பிக் பாஸ் மகத்- பிராச்சி திருமணம்! புகைப்படம் உள்ளே!

 

உறுதியானது பிக் பாஸ் மகத்- பிராச்சி திருமணம்! புகைப்படம் உள்ளே!

நடிகர் மகத், தன்னுடைய காதலி பிராச்சி மிஸ்ராவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.

சென்னை: நடிகர் மகத், தன்னுடைய காதலி பிராச்சி மிஸ்ராவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் மகத் . பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவரை பலருக்கும் அறிமுகப்படுத்தியது. பின்னர் அதில் பங்குக்கேற்ற சகபோட்டியாளரும், நடிகையுமான யாஷிகா ஆனந்த் மகத்தை காதலிப்பதாக சொல்ல, இதை நாசூக்காகத் தவிர்த்தார் மகத். ஆனால் மறுப்பேதும் சொல்லவில்லை.

mahath and prachi

இதனால் மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது  படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: மறுமணம் செய்து கொண்ட பிரபல டிவி தொகுப்பாளினி : யாரை திருமணம் செய்தார் தெரியுமா?