உறவினர்களின் நம்பிக்கை துரோகம்… அய்யோ..என்ன ஏமாத்திட்டாங்களே: கண்ணீர் விட்டு கதறிய வேட்பாளர்!?

 

உறவினர்களின் நம்பிக்கை துரோகம்… அய்யோ..என்ன ஏமாத்திட்டாங்களே:  கண்ணீர்  விட்டு கதறிய வேட்பாளர்!?

தேர்தலில் வெறும் 5 ஓட்டுகள்  மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திலேயே கதறி அழுத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது

தேர்தலில் வெறும் 5 ஓட்டுகள்  மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திலேயே கதறி அழுத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் நீது சட்டர்ன் வாலா. இவர் அதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கினார். தேர்தலில் வெற்றிபெறத் தீவிரம் காட்டி வந்த அவர், நேற்று வெளியாகி இருந்த முடிவுகளை எதிர்பார்த்து ஆர்வமுடன் காத்திருந்தார். 

neethu

அப்போது  வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. மாறாக பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர் வெறும் 5 ஓட்டுக்கள்  மட்டுமே பெற்றிருந்தார். இதனால் வாக்கு   எண்ணும்  மையத்திலேயே வாய் விட்டுக் கதறி அழுதார். அப்போது செய்தியாளர்களை அவரை சூழ்ந்து கொள்ள அவர்களிடம் பேசிய நீது, ‘எனக்கு வெறும் 5 ஓட்டுக்களே விழுந்துள்ளது. என் குடும்பத்திலேயே வாக்காளர்கள் 9 பேர் இருக்கும் போது எனக்கு எப்படி 5 வாக்காளர்கள் விழும்’ என்றார். 

neethu

அதற்குச் செய்தியாளர்களோ உங்கள் குடும்பத்திலேயே உங்களுக்கு ஆதரவு இல்லை போலிருக்கிறதே? என்று வில்லங்க தனமாகக் கேட்க, நான் வெற்றி பெறக் கூடாது என்று சதி நடந்துள்ளது. என் குடும்பத்தினர் எனக்கு தான் ஓட்டு போட்டார்கள். அப்படியிருக்கும் போது வெறும் 5 வாக்குகள் கிடைத்துள்ளது. ஏதோ  முறைகேடு நடந்துள்ளது. இனி  நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்’ என்று தேம்பித் தேம்பி அழுது கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார் நீது.