உருவ தோற்றத்தை வைத்து 45 வயது பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்ததாக வாட்ஸ்அப் வதந்தி : புகார் அளித்த தம்பதி!

 

உருவ தோற்றத்தை வைத்து 45 வயது பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்ததாக வாட்ஸ்அப் வதந்தி : புகார் அளித்த தம்பதி!

இளம் தம்பதியின் திருமண புகைப்படத்தை வைத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தம்பதி போலீசில் புகாரளித்துள்ளனர்.

கேரளா: இளம் தம்பதியின் திருமண புகைப்படத்தை வைத்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தம்பதி போலீசில் புகாரளித்துள்ளனர்.

கேரள மாநிலம் செருப்புழா பகுதியைச் சேர்ந்தவர் அனூப் செபாஸ்டியன். இவர் தனது கல்லூரித் தோழியான ஜுபி ஜோசப்  என்ற பெண்ணை காதலித்து  கடந்த 9-ம் தேதி திருமணம் செய்தார். இதையடுத்து இவர்களின் புகைப்படத்தை நாளிதழில் வெளியிட்டு மணமக்கள் குடும்பத்தினர் விளம்பரம் செய்திருந்தனர்.

இதையடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவர்களது புகைப்படங்களை வைத்து 47 வயதான பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்த 29 வயது இளைஞர் என்று  செய்திகள் பரப்பப்பட்டன

இந்நிலையில் இதைக்கண்டு வேதனை அடைந்த புதுமண தம்பதியினர் போலீசில் புகாரளித்துள்ளனர். உடல் தோற்றத்தை விமர்சிக்கும் வகையில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இப்புகாரின் அடிப்படையில் வதந்தியை பரப்பியவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.