உருவானது ஃபானி புயல் : அதி தீவிர புயலாக மாறும் என எச்சரிக்கை; தப்பிக்குமா தமிழகம்?!

 

உருவானது ஃபானி புயல் : அதி தீவிர புயலாக மாறும் என எச்சரிக்கை; தப்பிக்குமா தமிழகம்?!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் தற்போது வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. 

சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் தற்போது வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. 

rain

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் சில தினங்களுக்கு முன்பு  தெரிவித்தது.  இந்த காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழகத்தில் புயலுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. 

balachnadran

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்  பாலச்சந்திரன்,  ‘தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் தற்போது வலுவடைந்து புயலாக மாறியுள்ளது என்றும் இதற்கு ஃபானி என்று பெயரிடப் பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

fani

மேலும் இந்த  ஃபானி புயல், மெதுவாக வட தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் 30ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியைப் புயல் அடையும்’ என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  நாளை ஃபானி அதிதீவிர புயலாக மாறும் என்பதால், கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனிடையே ஃபானி புயல் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் கூறும்போது, ‘ ஃபானி புயல் தமிழகத்தை நெருங்கினால் கனமழைக்கோ அல்லது மிதமான மழைக்கோ வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதேசமயம் தமிழகத்திலிருந்து புயல் விலகி சென்றுவிட்டால் நிலப்பரப்பின் ஈரப்பதம் வெகுவாக குறைந்து கடுமையான அனல் காற்று வீசும் எனக் கூறியுள்ளார். 

rain

 

புயல் எச்சரிக்கை காரணமாகக் கடந்த 2 தினங்களாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை
இதனிடையே தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் ஊர்காவல் படையினர் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.