உயிர் பயம்: சென்னையிலிருந்து நேற்று மட்டும் பயணித்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

 

உயிர் பயம்: சென்னையிலிருந்து நேற்று மட்டும் பயணித்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

கொரோனா பீதி காரணமாக மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது.

கொரோனா பீதி காரணமாக மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது. இதனால் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் நேற்று இரவு முதல் சொந்தவூருக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு படையெடுத்தனர்.

koyambedu bus stand
சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும் நேற்று மாலையில் இருந்து அதிகாலை வரை 1855 பேருந்துகளில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, புதுச்சேரி, பெரம்பலூர்,  திருச்சி ஆகிய ஊர்களுக்கு 1080பேருந்துகளும், சேலம், தருமபுரி, ஒசூர், நாமக்கலுக்கு 50 பேருந்துகளும், கும்பகோணம், மன்னார்குடி, தஞ்சாவூர், நாகைக்கு 85 பேருந்துகளும், மதுரை, திண்டுக்கல் நாகர்கோயில், குமரி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடிக்கு 240 இயக்கப்பட்டுள்ளன. இதுதவிர 400 மாநகர பேருந்துகள் திருச்சி, வந்தவாசி, புதுச்சேரி, சிதம்பரம், செஞ்சி ஆகிய இடங்களுக்கு கூடுதலாக இயக்கப்பட்டுள்ளன.