உயிர்ச்சேதம் நடப்பதற்கு முன் ஆழ்துளைக் கிணறுகளை மூடுங்கள்: கிராம மக்கள் வேண்டுகோள்..!

 

உயிர்ச்சேதம் நடப்பதற்கு முன் ஆழ்துளைக் கிணறுகளை மூடுங்கள்: கிராம மக்கள் வேண்டுகோள்..!

சிறுவன் சுஜித் மட்டும் உயிரிழக்கவில்லை. இதற்கு முன்னர், இதே போலத் தமிழகத்தில் பலமுறை நிகழ்ந்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர், நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற 2 இரண்டு வயதுக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட பல்வேறு வல்லுநர்களைக் கொண்டு முயன்றும் சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. 88 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். 

Sujith

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மூடாமல் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவிட்டனர். மேலும், அரசு அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் மட்டும் உயிரிழக்கவில்லை. இதற்கு முன்னர், இதே போலத் தமிழகத்தில் பலமுறை நிகழ்ந்துள்ளது. 

borewell

ராமநாதபுரம், தஞ்சாக்கூர் என்னும் கிராமத்தில் 2 ஆழ்துளைக் கிணறுகள் 8 வருடங்களுக்கு முன்னர் தோண்டப்பட்டுள்ளன. பயன்பாடற்று கிடைக்கும் அந்த கிணறுகளை மூட வேண்டும் என்று அக்கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சுஜித்தின் மரணத்திற்கு பிறகு பெரும் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், உயிரிழப்பு ஏற்படுவதற்குள் ஆழ்துளைக் கிணற்றை மூடுங்கள் என்று அவ்வூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். சுஜித்தின் மரணம், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதபடி இருக்க மக்களுக்கும் அரசுக்கும் பாடம் புகட்டியுள்ளது.