உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் மருத்துவர்கள் மீது கொடூர தாக்குதல்! கொரோனாவை விட கொடுமையான மனிதம்!!

உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் மருத்துவர்கள் மீது கொடூர தாக்குதல்! கொரோனாவை விட கொடுமையான மனிதம்!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டிய நிலையில், அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், பணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை தாக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

ஹைதராபாத்தில் பலவித நோய் அறிகுறிகளுடன் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 49 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 49 வயது நபர் உயிரிழந்த நிலையில், சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவரது உறுவினர்கள் மருத்துவர்களை தாக்கினர். இதேபோல் இந்தூரில் தட்பாட்டி பாகல் பகுதியில் உள்ள ஒரு நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியை ஆய்வு செய்வதற்காக சுகாதாரப் பணியாளர்களும், மருத்துவ பணியாளர்களும் சென்றனர். அப்போது அவர்களுக்கு எதிராக முழக்கமிட்ட சிலர், கற்களை வீசி தாக்கி தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை 4 பேரை கைது செய்துள்ளது. மேலும் சிலரை தேடி வருகிறது. இதனிடையே மருத்துவப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி இமாம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் மருத்துவர்கள் மீது கொடூர தாக்குதல்! கொரோனாவை விட கொடுமையான மனிதம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பயத்தாராயன்புராவில் கொரோனா குறித்த ஆய்வு சென்ற சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வை தொடங்கியுள்ளனர் என அங்குள்ள மசூதியில் அறிவிப்பு வெளியானதாகவும், அதன்பின்னரே தாங்கள் தாக்கப்பட்டதாகவும், கிருஷ்ணவேணி என்ற பணியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.