உயிரை பணயம் வைத்து திருட வந்தா.. கல்லாவ தொடைச்சி வச்சிருக்க…. திருடனின் சோக கடிதம்!! 

 

உயிரை பணயம் வைத்து திருட வந்தா.. கல்லாவ தொடைச்சி வச்சிருக்க…. திருடனின் சோக கடிதம்!! 

கொள்ளையடிக்கச் சென்ற கடையில் பணம் இல்லாததால் விரக்தியடைந்த திருடன், கடை உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சுவாரஸ்ய சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது. 

கொள்ளையடிக்கச் சென்ற கடையில் பணம் இல்லாததால் விரக்தியடைந்த திருடன், கடை உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சுவாரஸ்ய சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது. 

நெய்வேலியை அடுத்த மந்தாரகுப்பத்தில் ஜெயராஜ் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் காலை கடையைத் திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பொருட்கள் சேதமடைந்திருப்பதை பார்த்தபோது, கடையில் கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்த ஜெயராஜ் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், திருடன் கடை உரிமையாளரை கேள்வி கேட்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றதுதான்.

நள்ளிரவில் கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்த திருடன், கல்லாவை திறந்து பார்த்துள்ளார். கட்டுக்கட்டாக பணம் இருக்கும் என நினைத்த திருடனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. கல்லா காலியாக இருந்ததைக் கண்டு பதறிப்போனார். ஏமாற்றமடைந்த அவர், வெறுமனே அங்கிருந்து தப்பிச் செல்ல விரும்பவில்லை. அதனால் பேப்பர், பேனாவை எடுத்த அவர், கடை உரிமையாளருக்கு ஆதங்கத்தோடு கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார்.

‘உயிரைப் பணயம் வச்சு திருட வந்தா, காசு இல்லாம கல்லாவை இப்படி தொடச்சி வச்சி என்னை ஏமாற்றிட்டீங்களே” என கடிதத்தில் எழுதிவைத்துள்ளார். மேலும் அதுக்குத்தான் இந்த குரங்குச் சேட்டையை செஞ்சிருக்கேன் என்று எழுதி வைத்துவிட்டு கடையிலிருந்த அரிசி, கோதுமை மாவு மூட்டை என அனைத்தையும் பிரித்து சேதப்படுத்திவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவ‌ல்துறையினர், திருடனைத் தேடி வருகின்றனர்.