உயிரைப் பறித்த ரயில் சாகசம்! – ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை

 

உயிரைப் பறித்த ரயில் சாகசம்! – ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை

சாகசம் செய்வது போல ரயில் படிக்கட்டில் பயணம் செய்த நபர் பாலத்தில் மோதி உயிரிழந்த வீடியோவை வெளியிட்டு இந்திய ரயில்வே பொது மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, ஃபுட்போர்டில் பயணிப்பது மிகப்பெரிய சாகசம் என்றே இளைஞர்கள் கருதுகின்றனர். ஃபுட்போடில் தொங்கியதால் ஏற்படும் உயிரிழப்பு

சாகசம் செய்வது போல ரயில் படிக்கட்டில் பயணம் செய்த நபர் பாலத்தில் மோதி உயிரிழந்த வீடியோவை வெளியிட்டு இந்திய ரயில்வே பொது மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது, ஃபுட்போர்டில் பயணிப்பது மிகப்பெரிய சாகசம் என்றே இளைஞர்கள் கருதுகின்றனர். ஃபுட்போடில் தொங்கியதால் ஏற்படும் உயிரிழப்பு பற்றி அவ்வப்போது செய்திகள் வருகின்றன. ரயில் வரும்போது செல்ஃபி எடுப்பது, மின்சார ஒயர் அருகே செல்ஃபி எடுப்பது என்று இளைஞர்களின் பல செல்ஃபி மோகம் உயிரிழப்பில் முடிந்தது என்று செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.  இளைஞர்களின் சாகர தாகம் மட்டும் குறையவில்லை.  

dishan

மும்பையில் ரயிலில் பயணம் செய்த தில்ஷன் (20) என்ற இளைஞர் பாலத்தில் மோதி உயிரிழந்த வீடியோவை இந்திய ரயில்வே அமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வௌியிட்டிருப்பது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வீடியோவில் வேகமாக செல்லும் தில்ஷன் ஃபுட்போர்டில் தொங்கியபடி பயணிக்கிறார். திடீரென்று ரயிலோடு ரயிலாக ஒட்டியபடி தப்பிக்க முயல்கிறார்… ஆனால் அதற்குள்ளாகப் பாலத்தில் மோதி கீழே விழுகிறார். இந்த காட்சியை அவரது நண்பர் ரயிலுக்குள் இருந்து படம் பிடித்துள்ளார். 

இந்த வீடியோவை இந்திய ரயில்வே அமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியில் இந்த பதிவு வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்தி தெரியாதவர்களும் உள்ளார்கள், அவர்களுக்கு இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது என்பது இவர்களுக்கு எப்போது புரியுமோ என்ற வகையில் பதிவு உள்ளது. அதை மொழியாக்கம் செய்து பார்த்தபோது, “ரயிலில் யாரும் சாகச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அது சட்ட விரோதம்” என்று குறிப்பிட்டுள்ளது.