உயிரைப் பறிக்கும் டெங்கு! தப்பிக்கிறது எப்படி..?

 

உயிரைப் பறிக்கும் டெங்கு! தப்பிக்கிறது எப்படி..?

சாதாரண கொசுவிற்கும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவிற்கும் வித்தியாசம் உண்டு. தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதில் இருந்தே டெங்கு காய்ச்சலின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு என சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், உயிரைக் கொல்லும் டெங்கு காய்ச்சல் வராமல் காப்பது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

Dengue

சாதாரண கொசுவிற்கும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவிற்கும் வித்தியாசம் உண்டு. தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியதில் இருந்தே டெங்கு காய்ச்சலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலின் தாக்கத்தை கடந்த ஆண்டை விட, தற்போது அரசு கட்டுப்படுத்தி இருந்தாலும், டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது? டெங்கு காய்ச்சலில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பதனைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு மக்களிடையே இன்றும் முழுமையாக சென்றடையவில்லை. டெங்கு காய்ச்சலில் இருந்து தப்புவது எப்படி என்பதனைப் பற்றி விரிவாக நம் டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக… படித்து விட்டு மறக்காமல் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த பயனுள்ள செய்தியை ஷேர் செய்யுங்கள்!

Dengue

வெறும் காய்ச்சல் மட்டுமே டெங்குவின் அறிகுறி கிடையாது. டெங்கு காய்ச்சல் வந்தவுடன், விரைவாகவும், முறையாகவும் சிகிச்சை எடுத்துக் கொண்டால், டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம். தொடர்ச்சியாக தலைவலியோ, சளி இருமலோ இருந்தால் அது டெங்கு காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம். குழந்தைகளின் உடலில் அலர்ஜி போன்று சிவப்பு நிற தடுப்புகள் காணப்பட்டாலோ காலதாமதம் செய்யாமல், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுங்கள். இது டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம். அது மாதிரியான நேரங்களில், கை வைத்தியம் செய்கிறேன் என்று நேரத்தைக் கடத்தாதீர்கள். விரைவான சிகிச்சை எடுத்துக் கொண்டால், டெங்குவை முற்றிலுமாக ஒழிக்கலாம்.

Hospital

தவிர, மழைக் காலங்களில் நமக்கென்ன என்று இருக்காமல், மழை நீரை எந்த இடத்திலும் தேங்க அனுமதிக்காதீர்கள். நாள் கணக்கில் தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் தான் டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.  அப்படி மழை நீர் தேங்கி நிற்கும் இடங்கள், நம் வீட்டில் பிரிட்ஜ்-க்கு பின்புறம் நாள் கணக்கில் தேங்கி நிற்கும் நீர் என்று கவனிக்காமல், தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. 

water

தவிர, டெங்கு கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் தன்மை கொண்டவை. வீட்டிற்குள்ளோ அல்லது வீட்டை சுற்றியோ பழைய டயர், உடைந்த பானை, பாட்டில், மணி பிளாண்ட், பிளாஸ்டிக் கவர், இளநீர் மற்றும் தேங்காய்க் கூடு ஆகியவற்றை அகற்றி டெங்கு கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  இவை தவிர, டெங்கு காய்ச்சல் வரும் வரை காத்திருக்காமல், வீட்டில் உள்ள அனைவருமே தகுத்த மருத்துவ ஆலோசனையோடு, வாரம் மூன்று முறை நிலவேம்புக் கசாயம் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Plastic wastages