உயிருக்கு பயந்து ஊரடங்கு ஆனால் உமக்கு அடங்காது கொரோனா! கமல்ஹாசன்

 

உயிருக்கு பயந்து ஊரடங்கு ஆனால் உமக்கு அடங்காது கொரோனா! கமல்ஹாசன்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. பின்னர் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு என்று கருத்து முன்வைக்கப்பட்டது

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. பின்னர் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு என்று கருத்து முன்வைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, தற்போது அமலில் உள்ளது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறையாததையடுத்து, மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

 

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “ஊரடங்கும் உயிருக்கு பயந்து – பிணி 
உமக்கடங்காது புரிந்து கொள்வீர். 
தண்ணீர்க்கடங்கா  நெருப்பு இது.
நீர், போதாதிதற்குயாமும் வேண்டும்.
மக்களைக் காக்க மக்களே மருந்து.
மனம் மாறு, அரசே 
மதம் மாறவல்ல 
எம் கட்டளை 
மனிதனை நேசிக்க வேண்டுகோள் 

மக்கள் நீதி மய்யம்” என பதிவிட்டுள்ளார்.