உயிருக்கு பயந்தவர்கள்தான் ஃபாசிஸ்ட்கள் பக்கம் நிற்பார்கள். பிரபல மலையாள நடிகர் அதிரடி பேச்சு!

உயிருக்கு பயந்தவர்கள்தான் ஃபாசிஸ்ட்கள் பக்கம் நிற்பார்கள். பிரபல மலையாள நடிகர் அதிரடி பேச்சு!

மாமுக் கோயா மலையாளத்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர்,ஒரு ஃபிரஞ்ச் படத்திலும் நடித்திருக்கிறார்.இவருக்கு பெருமழைக்காலம் படத்துக்காக கேரள அரசு சிறந்த நகைச்சுவை நடிகர் விருது கொடுத்து இருக்கிறது. 1979-ல் இருந்து நடித்து வரும் மாமுக்கோயா சமீபத்தில் கோழிக் கோட்டில் நடந்த கூட்டத்தில்தான் மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக இப்படி அதிரடியாகப் பேசி இருக்கிறார்.

mamukoya

கேரளமாநிலம் கோழிகோடு கடற்கரையில் முஸ்லீம் லீக் இளைஞரணி சார்பாக குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்பு தெரிவிக்குக் கூட்டம் நடந்தது.டெல்லியில் மாதக்கணக்கில் பெண்கள் கூடி போராட்டம் நடத்தும் ஷாஹின் பாக் கூட்டத்துகு ஆதரவாக இப்போது இந்தியாவில் நடத்தப்படும் எல்லா சி.ஏ.ஏ எதிர்ப்பு மேடைகளிக்கும் ஷாஹின் பாக் என்றே பெயரிடுகிறார்கள்.

அந்த வகையில் கோழிக்கோடு கடற்கரையில் அமைக்கப்பட்ட இந்தக் கூட்ட மேடைக்கும் ஷாஹின் பாக் ஸ்கொயர் என்றே பெயரிடப்பட்டிருந்தது. அந்த மேடையில் இஸ்லாமியர் என்ற முறையிலும்,திரைக்கலைஞர் என்ற முறையிலும் கலந்துகொண்ட மாமுகோயா அதிரடியாகப் பேசினார்.” உயிருக்குப் பயந்தவர்கள்தான் ஃபாசிஸ்ட்களுடன் கூட்டுச் சேர்வார்கள்.அவர்களை எதிர்க்கிற எழுத்தாளர்களையும்,கலைஞர்களையும் ஃபாசிஸ்டுகள் கொலை செய்கிறார்கள். எனக்கும் அப்படி சில சில்லரை கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன. ஆனால்,அதற்கெல்லாம் பயந்து மண்டியிடுபவன் அல்ல நான்” என்று மாமுகோயா பேசியிருப்பது கேரள மக்களிடையே ஒரு பிதிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.