உயிருக்கு ஆபத்து – பாஜகவை கைகாட்டும் கெஜ்ரிவால்

 

உயிருக்கு ஆபத்து – பாஜகவை கைகாட்டும் கெஜ்ரிவால்

“முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டு கொன்றது போல, என்னையும் என் பாதுகாவலர்களைக்கொண்டே கொல்ல பாஜக முயற்சிக்கிறது, என் பாதுகாவலர்கள் என் நடவடிக்கைகள் அனைத்தையும் பாஜகவுக்கு அன்றாடம் தெரியப்படுத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் என் சாவை விரும்புகின்றன என எந்த நேரத்தில் மோடி பரப்புரையின்போது திருவாய் மலர்ந்தாரோ தெரியவில்லை, இப்போது அதே டெய்லர் அதே வாடகையை டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் பயன்படுத்தி இருக்கிறார். மோடியாவது, எதிர்கட்சிகள் என பொத்தாம்பொதுவாக குற்றம் சாட்டி இருந்தார், ஆனால் கெஜ்ரிவால் நேரடியாக பாஜகவை குற்றம் சாட்டுகிறார்.

modi

பஞ்சாபில் தேர்தல் பரப்புரையின்போது கெஜ்ரிவால் தெரிவித்ததாவது: “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டு கொன்றது போல, என்னையும் என் பாதுகாவலர்களைக்கொண்டே கொல்ல பாஜக முயற்சிக்கிறது, என் பாதுகாவலர்கள் என் நடவடிக்கைகள் அனைத்தையும் பாஜகவுக்கு அன்றாடம் தெரியப்படுத்தி வருகின்றனர். ஒருவேளை, என்றாவது ஒருநாள் பாஜகவால் என் உயிருக்கு ஆபத்து நேரும்” 

ஆட்சியில் இருக்கும்போது தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, பிற கட்சிகளால் என்ன தீங்கு நேரிடும் என்பதை எடுத்துரைத்து ஓட்டு கேட்கும் சாத்வீகமான அனுகுமுறை எல்லாம் காலாவதியாகி வருகிறது போல. எதிர்க்கட்சிகளால் உயிருக்கு ஆபத்து என்று பிரதமரும், ஒரு மாநிலத்தின் முதல்வரும் மாற்றிமாற்றி குற்றம் சொல்லி ஓட்டு கேட்பதால், எங்கே போய் முடியும் என தெரியவில்லை