“உயிரிழந்த காளைக்கு இறுதிசடங்கு”.. சமூக விலகலை காற்றில் பறக்க விட்ட கிராம மக்கள்!

 

“உயிரிழந்த காளைக்கு இறுதிசடங்கு”..  சமூக விலகலை காற்றில் பறக்க விட்ட கிராம மக்கள்!

மக்கள் வீட்டிலேயே இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருவதால், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இருப்பினும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்த  வண்ணமே இருக்கின்றனர். இதனிடையே மக்கள் வீட்டிலேயே இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தும் நூதன தண்டனை விதித்தும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.   

ttn

இந்நிலையில், மதுரை முதுவரப்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் காளை உயிரிழந்ததால் அந்த ஊர்மக்கள் எல்லாரும் ஒன்று கூடி இறுதி சடங்கு செய்துள்ளனர். சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடிக்காமலும்  144 தடை உத்தரவை  மீறியும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இறுதி சடங்கில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ttn

உடனே அங்கு சென்ற போலீசார், இறுதி சடங்குகளை நடத்திய நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்ததாக கூறப்படுகிறது. அந்த சடங்கில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.