உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா உறுதி!

 

உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு  கொரோனா உறுதி!

உயிரியல் பூங்கா ஊழியர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது உலக நாடுகளில் பலபேரை இரையாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் 3லட்சத்து 36 ஆயிரத்து 958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 
9,626 பேர் பலியான நிலையில் 17, 407 பேர் குணமாகியுள்ளனர். 

ttn

இந்நிலையில் மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா தற்போது விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை.  அமெரிக்காவின் நியூயார்க்கில்  அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள புலி ஒன்றிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரியல் பூங்காவில் உள்ள மேலும் 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும்  கொரோனா அறிகுறி  இருப்பதாகவும், உயிரியல் பூங்கா ஊழியர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

tt

விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இருக்குமா என்ற கேள்வி இருந்த நிலையில் புலிக்கு கொரோனா தொற்று உண்டாகி இருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.