உயிரினங்களை காவு வாங்கும் கடல்; திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்!

 

உயிரினங்களை காவு வாங்கும் கடல்; திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்!

பிலிப்பைன்ஸ் நாட்டு கடலில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டு கடலில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும்  சுமார் 1 கோடி டன் பிளாஸ்டிக் கழிவு கடலில் கலப்பதாக கூறப்படுகிறது. பறவைகள், கால்நடைகள், திமிங்கலம் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் என ஒவ்வோர் பிளாஸ்டிக் கழிவால் உயிரிழந்து வருகின்றன.

plastic

மனிதர்களாகிய நாம் வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளால், தற்போது பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியாக கடல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் மாபினி நகரக் கடற்கரையில் திமிங்கலம் ஒன்று உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த மருத்துவர் குழு திமிங்கலத்தை உடற்கூறாய்வு செய்த போது, அரிசி பைகள், ஷாப்பிங் பைகள் என சுமார் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அதன் வயிற்றில் இருந்து அவர்கள் எடுத்துள்ளனர்.

plastic

பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதன் காரணமாக, உணவு உண்ண முடியாமல் திமிங்கிலம் அவதிப்பட்டு வந்ததாகவும், பிளாஸ்டிக் கழிவுகள் மூலமே அது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளால் திமிங்கலம் உயிரிழந்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.