உயர் சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு

 

உயர் சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு மசோதா: மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது

டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவெடுத்த மத்திய அரசு, இது தொடர்பான மசோதாவை மக்களவையில் நேற்று தாக்கல் செய்து நிறைவேற்றியது. ரபேல் விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவானது மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் பாஜக-வுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால், அங்கு இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது அக் கட்சிக்கு சவாலாக இருக்கும் என கருதப்பட்டது.

இந்நிலையில், உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீடு மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தினார்.

ஏற்கனவே, “முன்னேறிய வகுப்பில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10%இடஒதுக்கீடு’ என்ற மத்திய அரசின் முடிவு சமூகநீதிக்கு எதிரானது மட்டுமல்ல அரசியல் சட்டத்திற்கு முரணானது” என இந்த மசோதாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.