உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

 

உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

புதுதில்லி: உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவெடுத்த மத்திய அரசு, இது தொடர்பான மசோதாவை மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்து நிறைவேற்றியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

ரஃபேல் விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவானது மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு திமுக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், 165 வாக்குகள் ஆதரவாகவும், 7 வாக்குகள் எதிராகவும் பெற்று இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

இந்நிலையில், உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மநிலைக்கான இளைஞர் அமைப்பு சார்பிலும், குஷால் காந்த் மிஸ்ரா என்பவர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.