உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் பறிப்பு – அதிகாரிகளை தனியாளாய் எதிர்த்த‌ சிறுமி!

 

உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் பறிப்பு – அதிகாரிகளை தனியாளாய் எதிர்த்த‌ சிறுமி!

ஹைட்ரோகார்பன் எடுக்க, மீத்தேன் அள்ள, கெயில் எரிவாயு குழாய் அமைக்க, எட்டுவழிச்சாலைப் போட என தமிழகத்தை இஞ்ச் இஞ்ச்சாக அளந்து ஆட்டையப் போட்டுவருகிறார்கள். இப்போது புதிதாக, உயர்மின் கோபுரம் அமைக்கவேண்டும் என்று கோயம்புத்தூர் பக்கம் நிலங்களை அளக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

ஹைட்ரோகார்பன் எடுக்க, மீத்தேன் அள்ள, கெயில் எரிவாயு குழாய் அமைக்க, எட்டுவழிச்சாலைப் போட என தமிழகத்தை இஞ்ச் இஞ்ச்சாக அளந்து ஆட்டையப் போட்டுவருகிறார்கள். இப்போது புதிதாக, உயர்மின் கோபுரம் அமைக்கவேண்டும் என்று கோயம்புத்தூர் பக்கம் நிலங்களை அளக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதிகாரிகள். இதெல்லாம் இப்படியே தொடரும் என்றால், தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் கடலில்தான் குடியேற வேண்டியிருக்கும்.

Wires through farmlands

கோவை போகம்பட்டியில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு நில அளவீடு செய்வதற்காக வந்த அதிகாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, கூடவே அழைத்துவரப்பட்ட காவல்துறையினர் கிராம மக்களை கைது செய்ய முயன்றனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் போராடிய கனகம்மாள் என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அவரது மகள் மோனஸ்ரீ, தங்களது நிலத்தை விட்டு வெளியே செல்லுமாறு அரசு அதிகாரிகளுக்கு எதிராக குரல் எழுப்பினார். தாயை கைது செய்துவிடுவார்களோ என்ற பதைபதைப்பில் அழுகையும் கண்ணீருமாக சிறுமி போராடியது பார்ப்பவர்களை நெகிழ வைத்தது. அதிகாரிகள் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டனர்.