உயர்ந்து கொண்டே வரும் தங்க விலை.. ரூ.34 ஆயிரத்தை எட்டுமா?!

 

உயர்ந்து கொண்டே வரும் தங்க விலை.. ரூ.34 ஆயிரத்தை எட்டுமா?!

தங்க விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருவதால் ரூ.34 ஆயிரத்தை எட்டுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி சரிந்தது மீண்டும் ரூ.32 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, தங்க விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருவதால் ரூ.34 ஆயிரத்தை எட்டுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,216க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.33,728க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.00    க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,000க்கு விற்கப்படுகிறது.