உயர்ந்தது சென்செக்ஸ்! ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு! ஆனா பினிஷிங் எப்படி இருக்குமோ?

 

உயர்ந்தது சென்செக்ஸ்! ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு! ஆனா பினிஷிங் எப்படி இருக்குமோ?

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று காலையில் வர்த்தகம் நன்றாக இருந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர், காஷ்மீர் விவகாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் நேற்று பங்குச் சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு மரண பயத்தை காட்டின. நேற்று மட்டும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் சுமார் ரூ.1.50 லட்சம் கோடியை இழந்தனர். இதனால் இன்று பங்கு வர்த்தகம் எப்படி இருக்குமோ என்ற பயத்திலேயே முதலீட்டாளர்கள் இருந்தனர்.

பங்குச் சந்தை

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாகவே இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. காலை 10 மணி நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 56 புள்ளிகள் உயர்ந்து இருந்தது. 

பங்கு வர்த்தகம்

காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், யெஸ் பேங்க், ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ்இந்த் வங்கி, டெக் மகிந்திரா உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து இருந்தது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்து இருந்தது.