உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதா: சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

 

உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதா: சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது. 

சென்னை : உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது. 

பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக கூறப்படும் உயர் சாதி ஏழைகளுக்கு, பொதுப்பிரிவில் இருந்து 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த தீர்மானத்தை மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இதையடுத்து  இந்த தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

PRESIDENT

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  வரும் கல்வியாண்டு முதல் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பொதுப்பிரிவு ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.  அதன்படி ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவானவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்யப்பட்டுள்ளது.

KANIMOZHI

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது. முன்னதாக இம்மசோதா மீதான விவாதத்தில் ராஜ்யசபாவில் பங்கேற்றுப் பேசிய கனிமொழி, 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்குக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.